திருப்பூர் மாவட்டத்தில் 132 பாசன சங்கங்களின் மூலம் ரூபாய் 13.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பாசன சங்கங்களைச் சார்ந்த கிளை, உபகிளை, பகிர்மான வாய்க்கால்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதபோன்று, விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, குழாய் அமைத்தல், பாலங்களை சீரமைத்தல், மதகு, டிராப் போன்ற குறுக்கு கட்டுமானங்களை சீரமைத்தல், நீர் இழப்பினை தடுக்க கான்கிரீட் லைனிங் அமைத்தல், பாசன நீர் தடையின்றி செல்ல 174கி.மீட்டர் நீளத்திற்கு கிடக்கும் முட்புதர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கரோனா காலத்திலும் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து, ஆத்துகிணத்துபட்டி, கிழுவன்காட்டூர், மருள்பட்டி போன்ற இடங்களில் இடைவிடாது பணிகள் நடக்கிறது.
இந்நிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குடிமராமத்து பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், "குடிமராமத்து பணிகளை பொறுத்தவரை விவசாயிகளுக்கு தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு 13 கோடி ருபாய் வரை குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் ஆயிரத்தைத் நெருங்கும் கரோனா!