திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை, மேற்கு தொடர்ச்சி மலைகளின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 40 அடிக்கும் குறைவாக இருந்தது.
இந்நிலையில் கேரளா, வால்பாறை பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பருவ மழையின் காரணமாக பாம்பாறு, சின்னாறில் நீர்வரத்தால் கடந்த ஒரு வாரத்தில் படிப்படியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் இன்று (ஆக.6) காலை 72.84 அடியை எட்டியது. அணைக்கு நீர் வரத்து 6106 கன அடியாக இருந்துவருகிறது.
முன்னதாக அமராவதி அணையின் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் பாசனம் பெறும் விவசாயிகள் கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளிகிழங்கு , தென்னை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
அதனால், அவற்றை காக்க தண்ணீர் திறக்க வேண்டும் என முதலைம்மச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அமராவதி ஆற்றில் இன்று (ஆக. 6) முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு இன்று (ஆக.6) முதல் 11 நாள்களுக்கு மொத்தம் 1210 மில்லியன் கன அடி வரை நீர் திறக்கப்படவுள்ளது.
இதேபோல் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வாய்க்கால் மூலம் 440 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழைய புதிய ஆயக்கட்டில் உள்ள 25250 ஏக்கரில் பரப்பில் உள்ள பயிர்கள் உயிர் தண்ணீர் பெறும்.
இதையும் படிங்க..."தோல்வியடைந்த மும்மொழித் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது'- பழநெடுமாறன்