கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயிலால் மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என பலர் பயனடைந்து வந்தனர். இதனிடையே, கரோனா தொற்று காரணமாக அந்த ரயில் போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது. தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நீண்டதூர விரைவு ரயில்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பயணிகள் ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், சாதாரண ரயில்கள் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டு 15 ரூபாய் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பயணிகள் ரயிலை உடனடியாக இயக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர்,பொதுமக்கள் இன்று(பிப்ரவரி 26) திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட உக்கடம் ஸ்மார்ட் சிட்டி குளக்கரை