திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 56ஆவது வார்டு அதிமுக கிளை அலுவலகம் மத்திய காவல் நிலையம் எதிரே அமைந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இன்னொரு பிரிவினர் சார்பாக இன்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை திறந்து வைப்பதற்காக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்தன் வருகை புரிந்தார். ஏற்கனவே 56ஆவது வார்டுக்கு அனைத்து அணி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு அலுவலகம் இருக்கும் நிலையில், முன்னறிவிப்பின்றி தன்னிச்சையாக முன்னாள் அமைச்சர் ஆனந்தன் கட்சிக்கு விரோதமாக அலுவலகம் திறந்து வைக்க இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் தலைமையில அதிமுகவைச் சேர்ந்த ஒரு பிரிவினர் முன்னாள் அமைச்சர் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரே கட்சியைச் சேர்ந்த இருபிரிவினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருதரப்பினரையும் சமரசம் செய்ததுடன், அதிமுகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்துப் பேசிக் கொள்ளலாம் என பிரச்னையை ஒத்தி வைத்தனர்.
பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். அதிமுகவினர் இருபிரிவுகளாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சுவர் விளம்பரத்திற்கு இடம் பிடிக்க திமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு