திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம், வாலிபாளையம் ஆகியப் பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நேற்று (ஜன.12) நடைபெற்றது. இதில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு மினி கிளினிக்குகளின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், "அதிமுக, தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறது. ஆனால், கூட்டணி வைத்ததற்காக பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டதாக விஷமப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
இதற்கு முன்னாள் திமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தை சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு தீங்கு என்றால் மக்களோடு களத்தில் அதிமுக நிற்கும் எனப் பேசினார் . இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: முதல் ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தை நேபாளத்திற்கு இயக்கும் சென்னை ரயில்வே கோட்டம்