ETV Bharat / state

காரில் சென்றவருக்கு 'ஹெல்மெட்' அணியவில்லை என அபராதம் - திருப்பூர், பல்லடம், ஹெல்மெட்,  அபராதம், கார், நான்கு சக்கர வாகனம், அபராத ரசீது

திருப்பூர்: பல்லடம் அருகே காரில் சென்ற நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என காவல் துறையினர் அபராதத்திற்கான ரசீதை அளித்துள்ளனர்.

helmet, penalty
author img

By

Published : Sep 3, 2019, 3:50 PM IST

திருப்பூர், என்ஆர்கே புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் பல்லடம் அடுத்துள்ள பொங்களூருக்கு காரில் சென்றுள்ளார். பல்லடம் அருகே சென்றுக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில் இவரின், கார் எண் குறிப்பிடப்பட்டு, வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை என ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், தனக்கு ஹெல்மெட் அணியவில்லை என தாராபுரம் காவல் நிலையத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்ட ரசீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் பகுதிக்கு செல்லாத நிலையில் தனது வாகன எண் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது பயத்தை அளிக்கிறது என்றார்.

தற்போது அதிக அபராதம் விதிக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறுதலாக வாகனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தாராபுரம் காவல் நிலையம் தகவல் ஏதும் அளிக்கவில்லை.

Intro:காரில் சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராத ரசீது வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Body:திருப்பூர் என்.ஆர்.கே புரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் பல்லடம் அடுத்துள்ள பொங்களூருக்கு காரில் சென்றுள்ளார் பின்னர் பல்லடம் வந்த பொழுது அவருக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. தாராபுரம் காவல்துறையினர் என இருந்த அந்த மெசேஜில் அவருக்கு போலீசார் அபராதம் விதித்து இருந்ததை அறிந்தார். உடனடியாக அந்த ஈ.சலானை பார்த்தபொழுது இவரது கார் எண்ணை பயன்படுத்தி இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது, அதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை என 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தனக்கு ஹெல்மெட் அணியவில்லை என தாராபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஆபராதம் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தான் தாராபுரம் பகுதிக்கு செல்லாத நிலையில் தனது வாகன என் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் அச்சம் தெரிவித்தார். தற்போது அதிக அபராதம் விதிக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முறையான வசதிகள் இல்லாமல் தவறுதலாக அனைவருக்கும் அபராதங்கள் விதிக்கப்படுவது தொடர்ந்து வருவது புதிய மோட்டார் வாகன சட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.