ETV Bharat / state

கல்யாண வீட்டில் நடந்த கொலை..! அவிநாசியில் நடந்தது என்ன? - Tirupur wedding hall murder

Tirupur wedding hall murder: திருமண நிகழ்ச்சியில் பணிபுரிய வந்த சமையல் கலைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, உடன் பணியாற்ற வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கல்யாண வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 9:24 PM IST

திருப்பூர்: அவிநாசியில் சேலம் - கோவை இடையேயான தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் இன்று நடைபெற்று வரும் திருமணத்திற்காக, ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் ஆனந்தன் என்பவர், சமையல் மற்றும் உணவு பரிமாறுவதற்காக 10 பெண்கள் உள்ளிட்ட 20 ஆண்கள் என அழைத்து வந்துள்ளார்.

அதில் ஆனந்தன் அழைத்து வந்த சமையல் கலைஞர்களுள், கரூர் மாவட்டம் பொகலூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (44),
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி 50 மற்றும் மற்றொரு நபருக்கு (விவரம் அறியப்படாத நபர்) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் சேர்ந்து, மற்றொரு நபரைத் தாக்கியுள்ளனர். பதிலுக்கு அந்நபரும் இவர்கள் இருவரையும் தாக்கியதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த நபரை இருவரும் சேர்ந்து அடித்து மண்டபத்தை விட்டு வெளியில் துரத்தியதாகவும் கூறப்படுகிறது.

அந்த மோதலில் பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரும் இணைந்து, அந்த விவரம் அறியப்படாத நபரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் அந்த விவரம் அறியப்படாத நபர் சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள புதுவிதமான போதை பொருள் பறிமுதல்.. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது!

அதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி காவல் துறையினர், ரத்தக்காயத்துடன் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், அந்த விவரம் அறியப்படாத நபரின் உடலைப் பிரேத உடற்கூராய்வு செய்வதற்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், பிரகாஷ் மற்றும் சுந்தரமூர்த்தி இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் சமையல் கலைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட மோததில் மரணமடைந்த நபர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண மண்டபம் அருகே ஒருவர் மரணமடைந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கூலிப்படையை வைத்து மனைவியைக் கொன்ற கணவன் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.