ETV Bharat / state

'வெளி ஆள்கள் மூலமே 97 விழுக்காடு தொற்று பரவியது'- திருப்பூர் மாவட்ட ஆட்சியர்! - தமிழ்நாடு கரோனா நிலவரம்

திருப்பூர்: மாவட்டத்தில் 97 விழுக்காடு கரோனா தொற்று, வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலமே பரவியதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

'97 per cent infection spread by outsiders' - Tirupur Collector!

author img

By

Published : Jul 22, 2020, 4:52 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 541ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட குமார் நகர் பகுதியில், மாநகர சுகாதாரத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காய்ச்சல் கண்டறியும் முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'திருப்பூரில் 97விழுக்காடு கரோனா தொற்றானது வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமே பரவி உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாநகராட்சி முழுவதும் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் கிடைக்கும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கரோனாவை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியூர்களிலிருந்து திருப்பூருக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்' என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.