ETV Bharat / state

காங்கேயத்தில் ஒன்றிணைந்த பழனி பாதயாத்திரை பக்தர்கள் - அறுபடை வீடுகளில் முதன்யானதும், புகழ்பெற்றதுமான பழனி பாலதண்டாயுதபாணி கோயில்

திருப்பூர்: பழனி கோயிலுக்கு ஏழு மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காங்கேயம் வழியாகப் பாத யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Palani
பழனி
author img

By

Published : Jan 17, 2020, 1:03 PM IST

அறுபடை வீடுகளில் முதன்மையானதும் புகழ்பெற்றதுமான பழனி பாலதண்டாயுதபாணி கோயில். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, பாதயாத்திரையாக காவடி சுமந்து சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

அதே போல், இந்த ஆண்டும் பாத யாத்திரையாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஒன்றிணைந்து செல்வதால், சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

காங்கயத்தில் ஒன்றிணைந்த பழனி பாதயாத்திரை பக்தர்கள்

மேலும், பழனி சாலையில் சாரைசாரையாகச் செல்லும் பக்தர்களுக்கு உணவளிக்க சாலையோரங்களில் 3 கிலோமீட்டருக்கு ஒரு அன்னதான கூடங்களை அப்பகுதியின் தன்னார்வலர்கள் அமைத்து 3 நாள்களாகத் தொடர்ந்து உணவளித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மாட்டு பொங்கலன்று சங்கமிக்கும் நாட்டு மாடுகள்!

Intro:காங்கயம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை-ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக பயணம்Body:

ஆறுபடை வீடுகளில் முதன்மையானதும்,
புகழ்பெற்றதுமான பழநி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு 7 மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காங்கயம் வழியாக பாத யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் கடவுள் முருகன் குடி கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுக்கும் தை மாதத்தில் பக்தர் மாலை அணிந்து பாத யாத்திரையாக செல்வது தொன்றுதொட்டு நடந்துவருகிறது.

ஆறுபடை வீடுகளில் முதன்மை பெற்றதும், பாலகனாக முருக கடவுள் காட்சி தருவதும் பழநி யில் அமைந்துள்ள இக்கோவிலின் சிறப்பாகும்.பழநி முருகனுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மாலை அணிந்து விரதமிருந்து பக்கதர்கள் தங்கள் ஊர்களில் இருந்து பாத யாத்திரையாக காவடி சுமந்து சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

இவ்வாறு பாத யாத்திரையாக தருமபுரி,சேலம்,
ஈரோடு,நாமக்கல்,
கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சார்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் பாத யாத்திரையாக காங்கயம் வழியாக செல்வது வழக்கம்.இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர் அலங்கரிக்கப்பட்ட காவடி,
முருகன் சிலைகளுடன் பாத யாத்திரையாக சென்று கொண்டிருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் முதல் அலங்கியம் வரை உள்ள பழனி சாலையில் சாரை சாரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவளிக்க சாலை ஓரங்களில் 3 கிலோமீட்டருக்கு ஒரு அன்னதான கூடங்களை அந்தந்த பகுதி தன்னார்வலர்கள் அமைத்து 3 நாட்களுக்கு தொடர்ந்து உணவளித்து வருகின்றனர்.

பாத யாத்திரையாக வரும் 7 மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் ஒன்றிணைந்து செல்வதால்,சாலை முழுக்கவே கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.