திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி விஜய கார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது திருப்பூர் தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் பிரேமா மற்றும் அவரது சகோதரி தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.2500 காசோலையை தூய்மை இந்தியா திட்டத்திற்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
காசோலையை பெற்று கொண்ட ஆட்சியர் சிறுமிகள் இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். சிறுமிகளின் சமூகப்பணி அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வனவிலங்குகள் தாக்குதல் - வால்பாறை மக்கள் அச்சம்!