தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா இன்று முதல் வருகின்ற 27ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படவுள்ளது.
முதல் நாளான இன்று பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாநகர காவல் துறை மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்துத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இப்பேரணியானது பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கியச் சாலைகளின் வழியாக பழைய மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தினை வந்தடைந்தது. இப்பேரணியில் காவல் துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பாலாற்றின் உபரிநீர் சேமிப்பு: தடுப்பணை கட்டுவதற்கு உதவிய ஐஐடி!