ETV Bharat / state

ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் தங்க நகை கொள்ளை! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜவுளிக்கடை உரிமையாளரின் வீடு
ஜவுளிக்கடை உரிமையாளரின் வீடு
author img

By

Published : Jun 30, 2020, 2:25 PM IST

திருப்பூர் மாவட்டம் பி.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார் . இவர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், தனது தோட்டத்து வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று வீடு திரும்பியுள்ளர்.

அப்போது அவர் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்த நிலையில் கிடந்துள்ளது. அதைக்கண்டு பதறிப்போன அரவிந்த், நகை வைத்திறந்த அறையை சோதித்து பார்த்தபோது, அதிலிருந்த 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து அரவிந்த், தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை-மகன் உடற்கூறாய்வு அறிக்கை சமர்ப்பிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.