குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் இயக்கத்தினர் போராடிவருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் நேற்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதனால், ரயில் நிலையத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தப் பாதுகாப்பையும் மீறி 300-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தினுள்ளே சென்று தண்டவாளத்தில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவலர்கள் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.
இதனிடையே திருப்பூர் ரயில் நிலையத்தில் அனுமதியின்றி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவைச் சேர்ந்த 230 பேர் மீது ரயில்வே காவலர்கள் நான்கு பிரிவுகளிலும் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் இரண்டு பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!