நேபாள் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (32), ஆர்த்தி (25) தம்பதிக்கு பிரையன் (7), பிரியங்கா (4) மற்றும் அனில்(3) என மூன்று குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் தனது குடும்பத்தோடு திருப்பூர் தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் சந்தோஷ் சப்ளையராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (பிப்.9) மூத்த மகனான பிரையன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு மற்றொரு குழந்தையான பிரியங்காவும் எந்த அசைவும் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

சந்தேகமடைந்த பெற்றோர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து, பரிசோதித்ததில் பிரியங்காவும் உயிரிழந்துள்ளதாக மருத்துவர் உறுதி செய்திருக்கிறார். ஒரே வீட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்ணின் வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்