திருப்பூர் மாவட்டம் திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையில் உள்ள சாந்தி திரையரங்கப் பகுதிகளில் நேற்றிரவு திருப்பூர் வடக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கட்டடம் ஒன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குடிபோதையில் இருந்த நபர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டமல்லாமல் அவர்களைத் தாக்கவும் முயன்றுள்ளனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அங்கிருந்த வீரக்குமார், சிவக்குமார் உட்பட 17 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 67 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தையும், ஏழு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.