ETV Bharat / state

திருப்பூரில் எரிசாராயம் தயாரித்த கேரள மாநிலத்தவர் தப்பியோட்டம் - தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருப்பூர்: சின்னக்கனூர் பகுதியில் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

illicit liquor
illicit liquor
author img

By

Published : Jan 18, 2020, 5:56 PM IST

திருப்பூர் மாவட்டம், சேவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கனூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது.

இவர் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு அந்த தோட்டத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அவர்கள் எரிசாராயம் தயாரித்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருப்பதாக சேலம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜாவுக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், மத்திய குற்றப்புலனாய்வு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், 450 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இடத்தின் உரிமையாளர் கணேசனை கைது செய்த காவல் துறையினர் கேரளாவைச் சேர்ந்த நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

இதையும் படிங்க: லயோலா கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Intro:திருப்பூர் மாவட்ட சின்னக்கனூர் பகுதியில் கணேசன் என்பவர் தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது.மத்திய புலனாய்வு போலிசார் விசாரணை....Body:திருப்பூர் மாவட்டம் சேவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கனூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் இவருக்கு அதே பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள வீட்டை கேரளாவை சேர்ந்த சிலருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த அந்த நபர்கள் வெள்ளை நிற கேன்களில் எரி சாராயம் தயாரித்து கேன்கள் மூலம் கேரளாவிற்க்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய புலனாய்வு காவல் சேலம் மண்டலம் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடைப்படையில் இரவு சின்னகன்னூர் பகுதியில் கணேசன் என்பவர் தோட்டத்தில் வைத்து 450 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. வாடகைக்கு விடபட்ட இடத்தின் உரிமையாளர் கணேசன் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் கேரளாவை சேர்ந்த நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்....Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.