கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 7,500 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும், முறை சாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ரூபாய் 2000 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பாக 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவருமான சுப்பராயன் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'எதிர்க்கட்சிகள் மக்களுக்கு கடலைமிட்டாய்கூடத் தரவில்லை'