திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை நான்கு மணிளவில் அப்பகுதியில் கைப்பைகளுடன் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிமிருந்த கைப்பைகளில் 10 கிலோ போதைப்பொருள்கள் இருந்துள்ளன.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் நாயக் (26), பசு தேவதாஸ் (35) என்பதும் அவர்கள் போதைப்பொருள்கள் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 188 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த இருவர் கைது!