ETV Bharat / state

தாராபுரம் மலைத் தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்பட 10 பேர் காயம்

திருப்பூர் : மரத்தடியில் பொங்கல் வைக்கும் போது அடுப்பில் இருந்து புகை கிளம்பவே மரத்தின் கிளை வாதில் இருந்த தேனீக்கூட்டங்கள் கலைந்து அங்கிருந்த ஏழு மாத குழந்தை உட்பட 10 பேரை கொட்டியது .

10 injured in mountain bee sting
10 injured in mountain bee sting
author img

By

Published : Sep 14, 2020, 12:49 AM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள நந்தனா தேவி திருக்கோவிலுக்கு தாராபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது ஏழு மாத ஆண் குழந்தை , மூன்று வயது சிறுவனுக்கு மொட்டை அடிப்பதற்காக சென்றனர் .

கோயிலின் அருகே மொட்டை அடித்துவிட்டு கோவில் வளாகத்தில் மரத்தடியில் அடுப்பு வைத்து பொங்கல் வைத்துள்ளனர். அடுப்பில் இருந்து புகை கிளம்பவே மரத்தின் கிளை வாதில் இருந்த தேனீக்கூட்டங்கள் கலைந்து அங்கிருந்த ஏழு மாத குழந்தை உள்பட 10 பேரை கொட்டியது .

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும் கை கால்கள் வீங்கி அங்கிருந்து ஓடி அருகில் இருந்த கோயில் பகுதியில் ஒளிந்து கொண்டனர். தேனீக்களின் ஆக்ரோஷம் குறைந்த பிறகு ஆட்டோ மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர் . மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் குடும்பத்துடன் வீடு திரும்பினர் .

தேனீக்கள் கொட்டியது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் அப்பகுதியில் உள்ள தேனீக் கூட்டை வனத்துறையினரை கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.