திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனாபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை ராஜன் (21). இவர், தனது நண்பர்களுடன் இன்று (அக்டோபர் 23) ஆம்பூர் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் திருமணத்திற்காக ஜெகநாதன் வீட்டில் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக சோலைராஜன் கை, கழுத்துப் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல் துறையினர் சோலை ராஜனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திருமணத்திற்காக மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மரணம் - ஆம்பூர் அருகே இளைஞர் பலி
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே திருமணத்திற்கு மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.