திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ்(29). தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் நபிஸ். இருவரும் இன்று (மே.26) ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியிலுள்ள ஆனைமடுகு தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்றுள்ளனர்.
குளித்துக் கொண்டிருந்த போது திடீரென இம்தியாஸ் நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்கச் சென்ற நபிஸும் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதனைக் கண்ட அந்த பகுதி இளைஞர்கள் சிலர் உடனடியாக நபீஸை மீட்டனர். தடுப்பணையின் சேற்றில் சிக்கிக் கொண்ட இம்தியாஸை மீட்க முடியாததால், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு, காவல்துறையினர் அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன், சுமார் இரண்டு மணி நேரம் போராடி இம்தியாஸை சடலமாக மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட உடல், உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பருடன் தடுப்பணையில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 'குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் தண்டிக்கப்பட வேண்டும்' - கமல் ஹாசன்