திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த விஐபி நகரில் வசிப்பவர் தென்னரசு (30). இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்தார். தென்னரசு, அவருடைய 2 நண்பர்களுடன் நேற்றைய முன்தினம் (ஜன.22) இரவு திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளார். அதன்பின் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறப்பதற்காக, அவருடைய மனைவி புனிதாவுக்கு போன் செய்துள்ளார்.
அதேபோல் காலிங் பெல்லும் அடித்துள்ளார். ஆனால், வீடு திறக்கப்படாததால், 3ஆவது மாடியில் தனது வீட்டுக்கு பைப்லைன் வழியாக ஏற முயற்சித்துள்ளதாக தெரிகிறது. அப்போது தவறி கீழே விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவரது நண்பர்கள் இருவரும் அவரது உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தென்னரசின் மனைவி புனிதா மற்றும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து தென்னரசை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடுவதார அவரது உறவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதோடு உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர், நாட்றம்பள்ளி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் மாடுகளை திருடி விற்பனை செய்த ஹரியானா இளைஞர்கள் கைது!