வேலூர் அடுத்த சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின்(30). தனியார் நிதி நிறுவனம் ஒற்றில் பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணாண 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதம் கர்ப்பம் ஆக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியுடைய உறவுக்காரரான எட்வீன், அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதனால் இவர் மீது எந்த சந்தேகமும் யாருக்கும் எழவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதனால் சிறுமியை அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இச்சம்பவம் குறித்து எட்வீன் மீது வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் எட்வீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நடிகை வனிதா மீது புகார் அளித்த சூர்யா தேவி!