ETV Bharat / state

ஜோலார்பேட்டை அருகே அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி - younger Brother stabbed his elder brother to death near Jolarpet

ஜோலார்பேட்டை அருகே பணத் தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த அண்ணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணத்தகராறால் கணவன் மனைவியை கத்தியால் தாக்கிய நபர் - கணவர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 21, 2022, 10:46 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (63) இவரது தம்பி கோவிந்தராஜ்(54) என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக பணத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயராமன் மனைவி ஜெயலட்சுமி கடந்த 17ஆம் தேதி கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கோவிந்தராஜ் ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ஜெயராமன், தட்டி கேட்டுள்ளார். அப்போது கோவிந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராமனின் வயிற்றிலும், தடுக்க வந்த அவரது மனைவி ஜெயலட்சுமி மார்பு பகுதியிலும் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜெயராமன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகள் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோவிந்தராஜை தேடி வருகின்றனர். பணத்தகராறில் அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சொத்துத்தகராறில் சகோதரரின் மனைவியை ஓட ஓட வெட்டிய சம்பவம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.