ETV Bharat / state

இன்ஸ்டாவில் பழகி காதல் திருமணம்: பெற்றோருக்கு பயந்து ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் - இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம்

இன்ஸ்டாகிராமில் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி பாதுகாப்பு கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம்: பெற்றோருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம்

author img

By

Published : Dec 27, 2022, 5:06 PM IST

இன்ஸ்டாவில் பழகி காதல் திருமணம்: பெற்றோருக்கு பயந்து ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சதீஷ் (24), பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கனகராஜ் என்பவரின் மகள் முத்து மணிமாலா (23), பிபிஏ முடித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் கடந்த 2 வருடங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி, காதல் வயப்பட்டு, கடந்த 24ஆம் தேதி கடையநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் செய்து உள்ளனர். முன்னதாக, முத்துமணி மாலாவின் பெற்றோர்கள், சதீஷ் மாற்று சமுதாயத்தைச்சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்ததன் காரணமாக, இன்று காதல் ஜோடி இருவரும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மேயர் குழந்தைக்கு "திராவிட அரசன்" எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.