ETV Bharat / state

குடிநீர் வழங்காதைக் கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்!

author img

By

Published : Mar 8, 2021, 8:19 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சி பகுதியில் கடந்த சில காலமாக சரிவர குடிநீர் வழங்காதைக் கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் காலி குடங்களுடன் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்காதைக் கண்டித்து பெண்கள் போராட்டம்  வாணியம்பாடியில் குடிநீர் வழங்காதைக் கண்டித்து பெண்கள் போராட்டம்  பெண்கள் போராட்டம்  Women's protest against non-provision of drinking water  Women's protest against non-supply of drinking water in Vaniyambadi  Women's protest
Women's protest against non-provision of drinking water

வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 30ஆவது வார்டு மில்லத் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில வாரமாக இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், இதுவரை நகராட்சி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் உரிய முறையில் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

இதையும் படிங்க: 'மதுக்கடையை அடித்து நொறுக்குவோம்' - பெண்கள் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.