ETV Bharat / state

அண்ணா பல்கலை: பாதுகாப்பு முறைகள் எப்படி இருக்கும்? ஞானசேகரன் உள்ளே வந்தது எப்படி? - ANNA UNIVERSITY PROTECTION

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகத்தில் என்னென்ன பாதுகாப்பது நடவடிக்கைகள் இருந்து வருகிறது என்பதை பார்க்கலாம்.

சென்னை அண்ணா பல்கலை வளாகம்
சென்னை அண்ணா பல்கலை வளாகம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2024, 4:18 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சென்னை மாநகரை உலுக்கியுள்ளது. குற்றவாளி ஞானசேகரன் பல்கலை வளாகத்துக்குள் நுழைந்து, மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கும் நிலையில், அண்ணா பல்கலையில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்து வருகிறது என்பது நமக்கு தெரிய வந்துள்ளது.

கிண்டியின் முக்கியப் பகுதியான ராஜ்பவன் அருகில் அமைந்துள்ளது அண்ணா பல்கலைக் கழகம். 1978 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர், மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையின் பெயரில் இந்த பல்கலைக் கழகத்தினை துவக்கி வைத்தார். கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி என 3 கல்லூரி வளாகங்கள் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. மேலும் இளநிலை, முதுநிலை மாணவர்கள் தங்குவதற்கு 12 மாணவர்கள் விடுதியும், 7 மாணவிகள் விடுதியும் என 19 விடுதிகளும் உள்ளன. மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கான தனியாக இன்டர்நேஷனல் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

சென்னை அண்ணா பல்கலை வளாகம்
சென்னை அண்ணா பல்கலை வளாகம் (credit - ETV Bharat Tamil Nadu)

மொத்தம் 189 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்திற்கு 4 வாயில்கள் உள்ளன. முக்கிய நுழைவு வாயில் காந்திமண்டபம் அமைந்துள்ள சர்தார்வல்லபாய் பட்டேல் சாலையிலும், அதனைத் தொடர்ந்து அழக்கப்பா கல்லூரியிலும், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு வாயிலும், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்திற்குள் ஒரு வாயிலும், கோட்டூர்புரம் சாலையில் ஒரு வாயிலும் உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

பல்கலைக் கழக வளாகத்தில் முக்கியமான சாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக 50 சிசிடிவிக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது மேலும் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உ்ள்ளன. மாணவிகள் விடுதிப் பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாளகத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

மேலும், மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் வருவதையும், அவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை கண்காணிக்கவும் முன்னாள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு படையினர் 149 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் முக்கியமான இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருப்பார்கள். மேலும், வளாகத்தில் சுற்றுக் காவலிலும் ஈடுப்பட்டு இருப்பர். மேலும், பல்கலைக் வளாகத்திற்குள் வரும் பணியாளர்களை தவிர மற்றவர்களை அனுமதிக்கும் முன்னர் அவர்கள் குறித்த விபரங்களையும் பெறுவர்.

பொறியியல் கல்லூரி கட்டிடம்
பொறியியல் கல்லூரி கட்டிடம் (credit - ETV Bharat Tamil Nadu)

பல்கலையில் பாலியல் புகார்களை விசாரணை செய்வதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விடுதிகளின் வார்டன்களாக பேராசிரியர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதி மற்றும் துப்புரவு பணியில் அண்ணா பல்கலைக் கழகத்தில் தினக்கூலி மற்றும் நிரந்தரப் பணியாளர்களாக பணியாற்றியவர்களை நீக்கி விட்டு, தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணிக்கு ஆட்களை நியமனம் செய்துள்ளனர். மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியில் செல்வதற்கும், உள்ளே வருவதற்கும் எந்தவிதமான நேரக் கட்டுப்பாடும் கிடையாது.

நெடுஞ்சாலைத்துறையின் அலுவலகம்

இதனால் மாணவர்கள் வெளியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து உணவை வர வைத்தும் சாப்பிட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் கோட்டூர்புரம் காவல்நிலையம் அருகில் உள்ள உணவகங்களில் அண்ணா பல்கலைக் கழக மாணவிகள் தனது சக மாணவர்களுடன் வந்து உணவு உண்பதையுைம் பார்க்க முடியும்.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நெடுஞ்சாலைத்துறையின் வாயில் மூலமாகவும் வர முடியும். இந்த குற்றச்செயலில் ஈடுப்பட்ட ஞானசேகரன் நெடுஞ்சாலைத்துறையின் அலுவலகத்தின் அருகில் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.