ETV Bharat / state

துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் வந்து வாக்களித்த பெண் - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்துமதி துப்பாக்கி ஏந்திய காவல் துறையினருடன் வந்து தனது வாக்கினை பதிவுச் செய்தார்.

துப்பாக்கி ஏந்திய காவல் துறையினருடன் வந்து வாக்களித்த பெண்

author img

By

Published : Oct 9, 2021, 5:09 PM IST

திருப்பத்தூர்: மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி முடிவடைந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் மாதனூர், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று (அக்.9) நடைபெற்று வருகிறது. மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இந்துமதி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று சமூகத்தினர் அதிகம் இருக்கும் சூழலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டால் எதிர்ப்பு கிளம்பியது.

துப்பாக்கி ஏந்திய காவல் துறையினருடன் வந்து வாக்களித்த பெண்

காவலர்களுடன் வந்து வாக்களித்த பெண்

இந்துமதி வேட்புமனு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர் தட்டு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும் இந்துமதி ஆதரவாளர்கள் பூத் சிலிப்களை விநியோகிக்கும் போது தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதிவிற்கு போட்டியிட்ட இந்துமதி துப்பாக்கி ஏந்திய காவல் துறையினருடன் வந்து தனது வாக்கினை பதிவுச் செய்தார்.

இதையும் படிங்க: குஜராத் ஹெராயின் கடத்தல் வழக்கு: சென்னையில் என்ஐஏ அதிரடி ரெய்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.