திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நபர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (55). இவர் வாணியம்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சிறையிலிருந்து வெளியே வந்த அவர் மீண்டும் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை தொடர்ந்துள்ளார்.
பின்னர் அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர் மீது 27 வழக்குகள் உள்ளன.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ராணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் பரிந்துரைத்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர் சிவனருளும், ராணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ராணி மீது காவல் துறையினர் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் காய்ச்சிய 16 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!