ETV Bharat / state

காதலில் மோதல்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - வைரலாகும் வீடியோ

திருப்பத்தூரில் காதலனுடன் ஏற்பட்ட மோதலால் இளம்பெண் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்துக் குடிக்கும் போது எடுத்த, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; வைரலாகும் வீடியோ

author img

By

Published : Nov 25, 2022, 3:53 PM IST

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி. கணவனை இழந்த இவருக்கு இரு பெண்கள் உள்ள நிலையில் மூத்த பெண்ணிற்கு திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். மனோன்மணி மற்றும் அவரது இளைய மகள் சர்ண்யா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

சரண்யா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சரண்யா கடந்த 3 ஆண்டுகளாக திருப்பத்தூர் அன்சாகரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான அருண் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண், சரண்யாவிடம் பேச மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்த சரண்யா கடந்த 11-ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோ

பின்னர் எலி மருந்து குடித்துவிட்டதாக சரண்யா தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக சரண்யாவை மீட்ட அவரது சகோதரி சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யாவின் செல்போனையும் ஆய்வு செய்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

அதில், சரண்யா எலி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடிப்பதை அதில் வீடியோவாக எடுத்து பேசியுள்ளது தெரிவந்தது. அதனை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கணவரை கொல்ல கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.