திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மெகருன்னிசா அய்யூப் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக உரிய அனுமதியின்றி, விண்ணமங்கலம் பகுதியில் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ மூலம் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் அலுவலர்கள், பரப்புரையில் ஈடுபட்ட ஆட்டோ, ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: குன்னம் தொகுதியில் இயக்குநர் கெளதமன் வேட்புமனு தாக்கல்