திருப்பத்தூர்: தமிழ்நாடு- ஆந்திரா எல்லையில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கரடி ஒன்று 2 குட்டிகளுடன் நடமாடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் லட்சுமிபுரம் அருகே காமராஜ் என்பவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிகள் அழைத்துச் சென்றபோது அங்கிருந்த கரடி அவரை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த காமராஜை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இரு மாநில வனத்துறையினர் ஒன்றாக இணைந்து கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.