வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வர தடைவிதித்துள்ளது.
இதையடுத்து, அம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை வளாகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன.கோட்டை ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரின் மையத்தில் அமைந்துள்ள முக்கிய பூங்காவான பெரியார் பூங்காவும் மூடப்பட்டு வெறிச்சோடியுள்ளது. அதேபோல், வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள அமிர்தி சிறு மிருகக்காட்சி சாலை உயிரியல் பூங்காவும், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூடப்படும் அருங்காட்சியகங்கள்!