ETV Bharat / state

திருப்பத்தூரில் நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு

author img

By

Published : Mar 29, 2022, 8:04 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழந்தார்.

vellore-doctor-killed-in-road-accident
vellore-doctor-killed-in-road-accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து புறப்பட்ட கார் ஆம்பூர் நோக்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது விண்ணமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புகளை உடைத்து, எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதைக்கண்ட வாகனவோட்டிகள் கார்களிலிருந்து இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துமனையில் வாணியம்பாடியிலிருந்து புறப்பட்ட காரை ஓட்டிவந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த கார் விபத்தில் உயிரிழந்ததது வேலூர் தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்த சுரேஷ் குமார். இவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது சாலையை கடக்க முயன்ற வாகனத்தில் மோதமலிருக்க, தனது காரை திருப்பியுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பேருந்து விபத்தில் இறந்த மாணவரின் தாயாருக்கு அமைச்சர் ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.