ETV Bharat / state

வாணியம்பாடி விபத்து மீட்பு பணியின் போது உயிரிழந்த காவலர் முரளி குடும்பத்திற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆறுதல்! - வாணியம்பாடி காவலர் முரளியின் திருவுருவப்படத்திற்கு

Police officer dead during rescue operation in Vaniyambadi: வாணியம்பாடியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கிராமிய தலைமை காவலர் முரளி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 10:54 PM IST

Updated : Nov 14, 2023, 6:52 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் கடந்த நவ.11 ஆம் தேதி அரசு பேருந்தும் தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த வாணியம்பாடி கிராமிய தலைமை காவலர் முரளி(46) என்பவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், சக காவலர்கள் அவரை மீட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, நேற்று தலைமை காவலர் முரளி சொந்த ஊரான ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு காவலர் முரளியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக ஏ.கஸ்பா மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 21 குண்டுகள் முழங்க த்மிழ்நாடு காவல்துறையினரின் முழு மரியாதையுடன் தலைமை காவலர் முரளியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் உயிரிழந்த காவலர் முரளி கடந்த 2003ஆம் ஆண்டு காவலராக பணிக்கு சேர்ந்த நிலையில், கடந்த 20 ஆண்டு காலமாக ஆம்பூர் தாலுகா, நகர காவல்நிலையம், உமராபாத், வாணியம்பாடி நகரம் மற்றும் கிராமிய காவல்நிலையங்களில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகிய நிலையில், 7ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், 5ஆம் வகுப்பு படிக்கும் லோகித் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதைத்தொடர்ந்து, முரளியின் வீட்டிற்கு இன்று (நவ.13) சென்ற வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமை காவலர் முரளியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடி பேருந்து விபத்து; மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு.. 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Last Updated : Nov 14, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.