திருப்பத்தூர்: வாணியம்படி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(42). மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியா கும்பல் சரமரியாக வெட்டிப் படுகொலை செய்தது.
இதுதொடர்பான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில், இக்கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
மேலும், தலைமறைவாக இருந்த சிலரையும் தேடிவந்தனர். இந்நிலையில், இக்கொலையில் தொடர்புடைய பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்திய சீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகியோர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இருப்பினும், இக்கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இம்தியாஸ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வாணியம்பாடி கொலை விவகாரம் - இபிஎஸ்க்கு முதலமைச்சர் 'நச்' பதில்