திருப்பத்தூர்: ஜவ்வாது மலை புதூர் சேம்பாறை பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 35 பேர் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய போது மினிவேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
இதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான மினி வேன் 100 அடி பள்ளத்திலிருந்து மீட்கப்படாத நிலையில் இன்று (ஏப்.3) காலை அந்த மினிவேனிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரிந்துள்ளனர்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேருந்தில் அத்துமீறிய நபர் - குண்டூசியால் குத்தி தட்டிக்கேட்ட பெண்!