ETV Bharat / state

சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி! பெற்றோர் கதறல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 7:41 AM IST

Updated : Sep 27, 2023, 9:52 AM IST

வாணியம்பாடி அருகே சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்த நிலையில், அதில் தவறி விழுந்து 2 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 school students died in Tirupathur
சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 மாணவிகள் பலி

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில் சாலை பணிக்காக அருகில் உள்ள பகுதியில் குழி தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மண் எடுத்த அந்த பகுதி மூடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்த காரணத்தால் அந்த குழியில் மழை நீர் தோங்கி காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி ராஜேஸ்வரி மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் மோனிகா ஆகிய இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் கடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் மின்விளக்கு வெளிச்சம் எதுவும் இல்லாத காரணத்தால், இருவரும் எதிர்பாராத விதமாக சுமார் 10 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

மாணவிகள் கடைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை கண்டு, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி தேடிய போது, 2 மாணவிகளும் பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகள் இறப்பை தாங்க முடியாமல் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இரண்டு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகன்; கூலிப்படை வைத்து கொலை செய்த பெற்றோர் கைது!

Last Updated : Sep 27, 2023, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.