திருப்பத்தூர்: பெங்களூரில் இருந்து வேலூருக்கு காரில் குட்கா கடத்திச் செல்வதாக திருப்பத்தூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பத்தூர் வாணியம்பாடியில் டி.எஸ்.பி பழனி செல்வம் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, சுமார் 2 லட்சம் ரூபாய் மதிபிலான 14 மூட்டைகள் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதில் இருந்தது தெரியவந்தது.
போதைப்பொருள்கள் பறிமுதல்
இதையடுத்து, காரில் வந்த இரண்டு பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் வேலூரைச் சேர்ந்த ஜாபர்கான், நவீத் அகமது என்பது தெரியவந்தது.

உடனடியாக அவர்களிடம் இருந்த 14 மூட்டைகள் போதைப் பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை: 4 பேர் கைது