திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டபேரவைத் தொகுதிக்குள்பட்ட எஸ்என் பாளையம் பகுதியில், நேற்று (ஏப். 2) நள்ளிரவு திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படை அலுவலர்கள் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆம்பூர் அடுத்த மிட்டாளத்தைச் சேர்ந்த கிஷோர், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட இருவரும் திமுக வேட்பாளர் வில்வநாதனின் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பள்ளி கொண்டா காவல் துறையினர் இருவர் மீதும் தேர்தல் விதிமுறை மீறல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திமுக வேட்பாளர் வில்வனாதன் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'ஊழல் நரகத்தில் சிக்குண்ட தமிழ்நாட்டில் நல்லாட்சி மலரும்' - ஈஸ்டர் வாழ்த்தில் வைகோ நம்பிக்கை