திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் இன்று (ஜூலை25) காலை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பதும், இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர் இன்று காலை ஏலகிரி மலைப்பகுதியிலிருந்து தனது உறவினர் வீட்டிற்கு லத்தேரி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மின்னூர் பகுதியில் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கிச்சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்தது,
இதையடுத்து, விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவறான செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வேன் -ஞானவேல் ராஜா