ETV Bharat / state

நள்ளிரவில் மோதிக்கொண்ட லாரிகள் - 4 பேர் படுகாயம்! - midnight accident in in thirupattur

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே நள்ளிரவில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

trucks accident midnight
trucks accident midnight
author img

By

Published : Oct 25, 2020, 8:24 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், சோலூரில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவு இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில், ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சென்னையிலிருந்து பார்சல் லோடுகளை ஏற்றிவந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புகளை உடைத்து எதிரே வந்துகொண்டிருந்த கோழி லோடு லாரியின் மீது மோதி உள்ளது என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் விபத்து: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.