திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வலையாம்பட்டு ஊராட்சிக்குள்பட்ட காமராஜர் நகரில் ஊராட்சி சார்பாக ரூபாய் 23 லட்சத்தில் குப்பை கிடங்கு அமைக்கப்பட உள்ளது. ஆனால் குப்பை கிடங்கு அமைக்கப்படும் இடத்திற்கு அருகே குடியிருப்புப் பகுதி இருப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர் இந்நிலையில் நேற்று (அக்.9) குப்பை கிடங்கு அமைக்க அலுவலர்கள் அந்த இடத்தில் பள்ளத்தை தோண்ட ஆரம்பித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த காமராஜர் நகர், உமர் நகர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்பு இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது இங்கு அரசு பள்ளி, கோயில், மசூதி, வீடுகள் இருப்பதால் இங்கே குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:
முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலித்த கோட்டாட்சியர்!