திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை திட்டத்தின் கீழ் ரூ. 2.52 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குடியிருப்பு அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் பூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.
இதேபோல் ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டவும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தனர்.
இதையும் படிங்க...நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் சர்மா ஒலி பரிந்துரை!