கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் இன்று(ஜூலை 17) மாலை ஆம்பூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
இதற்கு முன்னதாக அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் புறவழிச்சாலையில் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனுமதியின்றி கூட்டம் கூடியதாகவும் கட்சி உறுப்பினரை வரவேற்றதாகவும், கார்த்திக் சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 பேர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலை அவமதிப்பு: கார்த்திக் சிதம்பரம் கண்டனம்!