நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. கரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மேலும், தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசின் வழிகாட்டுதலின்படி அவரவர் வீடுகளில் தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர்(ஐஜி) நாகராஜன், ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம், பைபாஸ், மார்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறைத் துணைத் தலைவர்(டிஐஜி) காமினி, காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோருடன் காவல்துறை பாதுகாப்பு பணி குறித்தும், நகரத்தின் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.