ETV Bharat / state

செல்போன் பேசிய படி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்! - transport department

செல்போன் பேசிய படி அரசு பேருந்தை ஓட்டிய காரணத்திற்காக, சம்பந்தப்பட்ட ஓட்டுநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேலூர் அரசு போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்

driver suspended
ஓட்டுநர் சஸ்பெண்ட்
author img

By

Published : Jun 9, 2023, 9:36 AM IST

திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலைகளிலும், சாலைகளிலும் சமீபத்தில் விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆகையால், சாலை விதிகளை கடைபிடித்து சாலையில் வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும், உத்தரவுகளையும் வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும், நாள்தோறும் சாலை விபத்துகளும், விபத்து மரணங்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வழியே செல்லும் அரசு நகரப் பேருந்தில் அரசின் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிய படி பேருந்தை அசால்டாக ஓட்டியது மட்டுமின்றி அத்துடன் அவருக்கு பிடித்த நொறுக்குத் தீனிகளையும் உண்டு கொண்டு மிகவும் கவனக்குறைவாக பேருந்தை இயக்கி வந்ததாக அப்பேருந்தில் பயணம் செய்தவர்கள் பலரும் குற்றம் சாட்டினர்.

அதனிடையே பேருந்தில் பயணித்த ஒருவர் அவர் செய்த செயல்களை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்நிலையில் வாணியம்பாடி - ஆம்பூர் வழித்தடத்தில் செல்லக்கூடிய அரசு பேருந்தை அரசின் விதிமுறைகளை மீறி அந்த பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசிய படியே ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டிய அரசு ஓட்டுநர்

மேலும் இவ்வாறு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தை இவ்வாறு கவனக்குறைவாக இயக்கினால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாகி விடும். ஆகையால் இப்படி கவனக் குறைவான முறையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மீது அரசு போக்குவரக்கழகத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து அரசின் உத்தரவை மீறி அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாணியம்பாடி - ஆம்பூர் வழித்தடத்தில் செல்லக்கூடிய அரசு பேருந்தை செல்போன் பேசிய படி ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநர் பிரதீப்குமாரை தற்காலி பணியிடை நீக்கம் செய்ய அறிவித்து வேலூர் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர் பிரதீப்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: இறந்த கணவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்த வழக்கு: முழு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.