திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இதுவரையில் இல்லாத வகையில் புதிதாக 108 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,383ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில், கரோனாவிலிருந்து மீண்டு இதுவரை 3,664 பேர் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அம்மாவட்டத்தில் இதுவரை 76,003 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2,031 பேர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். 3,393 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : கேஸ் கசிந்து வீட்டில் பற்றி எரிந்த தீ!