ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 335 வாக்கு சாவடி மையங்களில், 57 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்டு உள்ளன. இதில் ஆம்பூர் நகரத்துக்குள்பட்ட பன்னீர் செல்வம் நகர், மஜ்ஹருலும் கல்லூரி, பி .கஸ்பா உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட ஆட்சியர் சிவனருள் நேரில் சென்று நேற்று (மார்ச்5) பார்வையிட்டார்.
அதன் பின்னர், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் உள்ள பள்ளி சுவற்றில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரையப்பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி எவ்வாறு வாக்களிப்பது என்பதை விளக்கும் விதமாக ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட்டார்.
அதன் பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சௌந்தரராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி!