ETV Bharat / state

12 பானைகள் மீது நின்று சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை! - திருப்பத்தூரில் பானைகளின் மேல் நின்று சிலம்பம் சுற்றி சிறுவன் சாதனை

திருப்பத்தூரில் ஐந்து வயது சிறுவன் 12 பானைகள் மீது 20 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (Nobel World Records) புத்தகத்தில் இடம் பிடித்துத்துள்ளார்.

12 பானைகள் மேல் நின்று சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை

author img

By

Published : Jan 29, 2022, 12:30 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூரை சேர்ந்த ஜெனோ (5) என்ற சிறுவன் பாரத் இன்ஸ்டியூட் சிலம்பம் மற்றும் கராத்தே கூடத்தில் சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். சிலம்பம் கலை மீது ஆர்வம் கொண்ட சிறுவன் முறையாக பயிற்சி பெற்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார்.

சென்னையில் இருந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் குழுவினர் திருப்பத்தூர் சென்று சிறுவன் ஜெனோவின் திறமையைப் பதிவு செய்தனர். 12 பானைகள் மீது மாறி மாறி ஏறி நின்று 20 நிமிடம் விடாமல் சிலம்பம் சுற்றி சிறுவன் அசத்தினான். இதனைப் பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

12 பானைகள் மீது நின்று சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சிறுவனுக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகெண்டனர்.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்பை தன்வசமாக்கிய ஏழை மாற்றுத்திறனாளி மாணவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.